என்னோட பத்து படங்களில் நிச்சயம் ‘சிங்கம்’ பெரிய படம்தான். பொதுவா ஒரு படத்தை 80 நாட்களுக்குள்ளும், 100 ரோலுக்குள்ளும் முடித்துவிடுவேன். ஆனா, ‘சிங்கம்’ உருவாக 108 நாள் ஆனது. 150 ரோல், பிலிம் செலவானது. தூத்துக்குடி, நல்லூரில் ஆரம்பிக்கிற கதை. ஆந்திர மாநிலம் நெல்லூரில் முடிகிறது. இடையில் ஹீரோவினுடைய பயணம், பக்கா ஆக்ஷன் பிளஸ் சென்டிமென்ட். பைக், கார், ஹெலிகாப்டர், ரயில், கப்பல்னு அத்தனையிலும் கதை பயணிக்கிறது. இடைவேளைக்கு பிறகு 2&வது ரீலிலேயே கிளைமாக்ஸ் தொடங்கிடும். அந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும் ‘தமிழ்’ படத்தில் துவங்கிய ஹரியின் பயணத்தில், ‘சிங்கம்’ பத்தாவது படமாக வெளிவருகிறது. இதுவரை இல்லாத பெரிய பட்ஜெட் படம். தன் முந்தைய படங்களை விட, தனித்தன்மையுடன் உருவாகியிருக்கிறது என்ற இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹரி.
சிங்கம் போலீஸ் அதிகாரி எப்படி?
துரை சிங்கம், அவரது அப்பாவால் வலுக்கட்டாயமாக அந்த துறைக்கு தள்ளப்பட்டவர். அதாவது கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்பட்டவர். பின்னர் ஒரு கட்டத்தில் அந்த வேலையை காதலிக்க ஆரம்பிக்கிறார். பெரும்பாலும் எந்த பிரச்னையையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போகாமல் முடிக்கப் பார்க்கிறார். அப்போது அவருக்கு வருகிற பிரச்னைகள்தான் கதை.
திருநெல்வேலி பொண்ணு கேரக்டருக்கு அனுஷ்கா பொருந்துகிறாரா?
அச்சு அசலாக அப்படியே பொருந்துகிறார். அதற்காகத்தான் அவரை தேர்வு செய்தேன். அவரது உயரம், முகச் சாயல், நடை அனைத்திலும் நெல்லை சாயல் அப்படியே இருக்கும். ‘சிங்கம்’ அனுஷ்காவுக்கு இன்னொரு திருப்பத்தை தரும்.
விவேக் காமெடி எப்படி?
பொதுவாக என்னோட படத்துக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரவேண்டும் என்று எதிர் பார்ப்பேன். இளைஞர்களுக்கு ஆக்ஷன் இருக்கும், பெரியவர்களுக்கு சென்டிமென்ட் இருக்கும், குழந்தைகளுக்கு காமெடி இருக்கும். இந்தப் படத்துல விவேக் காமெடி பண்ணியிருக்கார். பொதுவா விவேக் காமெடி என்றால் வசனம் அதிகமாக இருக்கும், கருத்து அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இதில் அவர் குழந்தைகளுக்காக கோமாளியாகவே மாறியிருக்கிறார். விவேக் காமெடியில் நிச்சயம் இதில் பேசப்படுவதாக இருக்கும்.
பிரகாஷ்ராஜ் கேரக்டர் பற்றி?
இந்த படத்தின் ஸ்கிரிப்டை முடித்தவுடனேயே இதில் வரும் வில்லன் கேரக்டருக்கு பிரகாஷ்ராஜ்தான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன். வேறு யார் நடித்தாலும் அந்த அளவுக்கு எபெக்ட் கொடுக்க முடியாது. பிரகாஷ்ராஜ் பிசியாக இருந்தார். அவரிடம் கிளைமாக்சில் ஆரம்பித்து கதை சொல்லி இம்ப்ரஸ் செய்து சம்மதிக்க வைத்தேன். அதோடு அவருக்கு 28 காட்சிகள் படத்தில் இருக்கிறது. வில்லன் கேரக்டருக்கு இத்தனை காட்சிகள் அமைவது ரொம்பவே அபூர்வம். படம் பார்க்கும்போது அந்த முக்கியத்துவம் தெரியும்.

No comments:
Post a Comment